கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், “12 மணிக்கு கரூருக்கு வருவதாக அறிவித்த விஜய்க்காக தண்ணீர் , உணவு கூட இல்லாமல் பல மணி நேரம் மக்கள் காத்திருந்ததே இம்மரணங்களுக்கு முக்கிய காரணம். காவல்துறையின் விதிகளை ம*ராக கூட மதிக்காமல் கூட்டம் விஜயே முதல் குற்றவாளி” எனக் கூறியுள்ளார். அதே போல் அரசும் தகுந்த பாதுக்காப்பு நடவடிக்கைகளை கொடுத்திருக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
12 மணிக்கு கரூர்க்கு வருவதாக அறிவித்த தண்ணீர் உணவு கூட இல்லாமல் பல மணி காத்திக்கிடந்ததே இம்மரணங்களுக்கு ஒரே காரணம்
காவல்துறையின் விதிகளை மயிராக் கூட மதிக்காத விஜய்யே முதல் குற்றவாளி ! pic.twitter.com/OAG2nGEcZj
— Duraimurugan (@Saattaidurai) September 27, 2025
