அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

ராம் லல்லா ஒரு ஐந்து வயது குழந்தை .காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 மணி முதல் 1.30 மணி வரை மூட இருக்கிறோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும் என்று ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.