பொதுவாகசிசிடிவி கேமராக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பிற்காக பொருத்தப்படும். ஆனால் இப்போது வயல் வெளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் விவசாயிகள் இதை நோக்கி திரும்பினர்.

இதனையடுத்து சமீபகாலமாக சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனையாகி வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் முகெட் பகுதியில் உள்ள பல கிராமங்களின் வயல்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.