தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவு வகைகளை அரசு முன்னதாகவே பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பேரூராட்சிப் பகுதிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் முதல்வர் இன்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை ஆய்வுசெய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் திட்டம் விரிவு படுத்துதலை பற்றி கூறினார்.