தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் என்று கூறி ஏமாற்றிய வினோத் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தன்னுடைய தலைமையில் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றுள்ளது எனக் கூறி  முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் வினோத் பாபு. அதோடு தனக்கு அரசு வேலையை கிடைக்க பரிசீலனை செய்யுமாறு வினோத் பாபு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இப்படிப்பட்ட ஒருவர் நம் அணியில் இல்லை என சந்தேகப்பட்டு உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரை தொடர்ந்து உளவுத்துறை மேற்கொண்ட விசாரணையில் வினோத் பாபு என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் கேப்டன் என கூறி பிரபலங்கள் உட்பட பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. அவர்களிடம் வினோத் பாபு பண உதவியும் பெற்றுள்ளார். இதேபோன்று தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியுரையும் கடையில் வாங்கிய கோப்பையை வைத்து ஏமாற்றியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் பாபுவிடம் பாஸ்போர்ட் கிடையாது. அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வினோத் பாபு மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.