புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும் காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மனித மலத்தில் இருந்து டிஎன்ஏ பரிசோதனை செய்வது சாத்தியமற்றது என்றும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தற்போது எவிடென்ஸ் கதிர் கூறியுள்ளார். ஒரு மனிதனின், சளி, ரத்தம், எலும்பு, தலைமுடி ஆகியவற்றிலிருந்து டிஎன்ஏ எடுக்க முடியும் எனவும் மலத்தில் இருந்து டிஎன்ஏ பரிசோதனை என்பது சாத்தியமற்றது என நிபுணர்கள் கருதுவதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

சாலை ஓரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மனித மலத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்வதாக கூறப்படுகிறது. விசாரணையில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்பதை விசாரணைக் குழு தெரிவிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியை விசாரணை குழு தலைவராக நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த அவசர கதி டிஎன்ஏ பரிசோதனை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக எல்லா சதியும் வெளிச்சத்திற்கு வந்து தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வேங்கைவயல் சம்பவம் குறித்து எவிடென்ஸ் கதிர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.