காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் முத்துசாமி கொதித்துள்ளார். கோவையில் ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆயத்துறை அமைச்சர் முத்துசாமி, கடுமையான பணி சூழலில் இருப்பவர்கள் குடிக்கும் போது அவர்களை குடிகாரர்கள் என்று கூறாதீர்கள் ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறுவது தவறு இல்லை.

காலையில் கடுமையான வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டாமா? அவர்கள் செய்யும் வேலை எல்லாம் வேண்டும், சாக்கடை அடைப்பை யார் சரி செய்கிறார்கள்? அவர்களை ஏன் குடிகாரர்கள் என கேவலப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.