அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “செந்தில் பாலாஜிக்கு 10 நாட்களுக்கு மேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தேவையில்லை. சிறை மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். தேவைப்பட்டால் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிறைக்குள் சென்று சிகிச்சை அளிக்கலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.