தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திட்டம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியது.

இந்நிலையில் மகளிருக்கு மாதம் 1000 வழங்கும்திட்டத்தில் எந்த ஒரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என்று தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியிருக்கிறார். இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அப்போது வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி அறிவுரை கூறினார். இத்திட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தி தகுதி வாய்ந்த பயனர்களை கண்டறிய தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்