மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் ₹3.14 மற்றும் டீசல் ₹3.11 அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், இன்று சென்னையில் மேலும் 10 காசுகள் எகிறி ஒரு லிட்டர் பெட்ரோல் ₹103.77-க்கும், டீசல் ₹95.35-க்கும் விற்பனையாகி வாகன ஓட்டிகளின் பாக்கெட்டைப் பதம் பார்த்து வருகிறது.
இந்த விலை உயர்வு வரும் நாட்களில் மேலும் ₹28 வரை உயரக்கூடும் என்ற ‘பகீர்’ தகவல் சாமானிய நடுத்தரக் குடும்பங்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ள சூழலில், எவ்வித மாற்றமும் இன்றி ₹91.50-க்கு விற்கப்படும் சிஎன்ஜி (CNG) விலை மட்டுமே தற்போதைக்கு ஓரே ஆறுதலாக உள்ளது.
