முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவராஜ் பாட்டீல் சகுர்கர் (90) இன்று (டிசம்பர் 12) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மகாராஷ்டிராவின் லாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
#WATCH | Latur, Maharashtra: Congress leader and former Union Home Minister Shivraj Patil passed away at his residence in Latur today
(Visuals from his residence in Latur) pic.twitter.com/C1SPaTAatf
— ANI (@ANI) December 12, 2025
“>
அரசியலில் முக்கியப் பங்கு வகித்த அவர், மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர் மற்றும் பஞ்சாப் ஆளுநர் போன்ற முக்கியப் பதவிகளை வகித்தவர். சிவராஜ் பாட்டீல் சகுர்கரின் மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
