முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியாகக் கருதப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.
அவருடன் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். ஏற்கனவே ஓபிஎஸ் அணியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுக, தவெக என வெவ்வேறு கட்சிகளுக்குத் தாவி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
“தலைமை எடுக்காத முடிவுகளால் தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்” என்பதே இந்தத் தாவல்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
