பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துறையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது. இந்த வார தலைவராக யுகேந்திரன் இருந்து வருகிறார்.

இவரால் இந்த பிக் பாஸ் தலைமை நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் கூல் சுரேஷ் நடிகை விசித்ராவின் காலில் விழுகிறார், பின்னர் மாயாவை ஏதோ சொல்லி கலாய்க்கிறார். அதன்பின் மாயா தான் கேலி செய்யப்பட்டதை உணர்ந்து கண்ணீர் விடுகிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நிகழ்ச்சியை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்