
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு ஜோடி போக்குவரத்து விதிகளை மீறி ஓடும் பைக்கில் முத்தமிடும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஆண் பிஸியான சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார். அதே சமயம் பெண் ஒருவர் பைக்கின் பின்னால் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த ஆண் வாகனம் ஓட்டும்போது சாலையை பார்க்காமல் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை முத்தமிடுகின்றார். அவர்களில் இருவரும் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளனர்.
அந்த பகுதி மக்களால் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அந்த வாகனம் ஓட்டிக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
kitne ka chalan hona chaiye?@jaipur_police pic.twitter.com/HVq0Ufiq9Z
— rajni singh (@imrajni_singh) September 15, 2023