மராட்டியத்தில் போலி ஜோதிடர் அசோக் காரத் என்பவர் பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவருடைய நெருங்கிய உதவியாளரும், அறக்கட்டளை துணைத் தலைவருமான ஜிதேந்திர ஷெல்கே தனது குடும்பத்துடன் காரில் சென்றபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த கோர விபத்தில் ஜிதேந்திர ஷெல்கே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், சிகிச்சையில் இருந்த அவருடைய மனைவியும் பரிதாபமாக பலியானார். பலத்த காயமடைந்த இவர்களுடைய 14 வயது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தற்செயலாக நடந்தது தானா அல்லது திட்டமிட்ட சதி செயலா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசோக் காரத்தின் சட்டவிரோத ரகசியங்கள் வெளியே வராமல் தடுக்கவே இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அமலாக்கத் துறை விசாரணை நடந்த சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளதால், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.