மசூரிக்குச் செல்லும் வழியில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலையிலேயே வீசி எறிந்த சம்பவத்தை அனூப் நௌடியல் என்ற நபர் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த சுற்றுலாப் பயணிகள் வீசிய பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஸ்பூனை எடுத்துச் சென்று, அவர்களிடம் கொடுத்து, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவது தவறு என்று அவர் நிதானமாக அறிவுறுத்தினார்.

மேலும் “நீங்கள் படித்தவர்கள், இப்படிச் செய்வது வருத்தமளிக்கிறது” என்று கூறிய அவர், உத்தராகண்டம் மட்டுமல்லாது, எந்த இடத்திலும் இதுபோன்று செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Anoop Nautiyal (@anoop_nautiyal)

“>

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டதாகவும், அவர்களை அவமானப்படுத்துவது தனது நோக்கமல்ல, மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்தச் செயலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.