உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள “பிரியாணி பே” என்ற பிரபலமான உணவகத்தில், 12 முதல் 13 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று சாப்பிட வந்தது. அவர்கள் சிலர் சைவ உணவு, சிலர் அசைவ உணவு என விருப்பப்படி ஆர்டர் செய்தனர். ஆனால், அப்போது அந்த குழுவில் ஒருவர் காய்கறி தட்டில் எலும்பு இருப்பதாக கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, உணவகத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பதற்றமடைந்தனர்.

உடனே உணவக உரிமையாளர் காவல்துறையை அழைத்தார். போலீசார் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை சரிபார்த்ததில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, அந்த இளைஞர்களில் ஒருவன், அசைவ தட்டில் இருந்த எலும்பை எடுத்து, மற்றொருவரின் காய்கறி சாப்பாடு  தட்டில் வைப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டது. இது திட்டமிட்டு சலசலப்பை ஏற்படுத்தி, உணவுக்கான கட்டணத்தை தவிர்க்கும் முயற்சி என உணவக உரிமையாளர் கூறினார்.

“>

 

உணவக உரிமையாளர் ரவிகர் சிங், “நாங்கள் சைவம் மற்றும் அசைவத்தை தனித்தனியாகவே தயார் செய்கிறோம். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் சிலர் திட்டமிட்டு நம் பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளால் எங்கள் நற்பெயர் கெடக்க கூடாது,” என்று கூறினார். மேலும், சிசிடிவி வீடியோ ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“>

 

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. உணவக உரிமையாளரின் நேர்மையும், சிசிடிவி ஆதாரங்களும் உண்மையை வெளிக்கொண்டுவர  உதவியுள்ளன. இந்நிலையில், பொய்யான புகார்களைத் கூறும்  இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.