நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் இந்தமுறை அரசியல் குதித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் X பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. X பயனர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு, ” நண்பன் படத்துடன், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ரிலீஸ் பண்ணுங்க, செமயா இருக்கும்” என உதயநிதியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

அதற்கு உதயநிதி, “காமெடி பண்ணாதீங்க ப்ரோ, விஜய் அண்ணா கூட போய் போட்டி போட நான் என்ன லூசா?” என பதிவிட்டுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் உதயநிதியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.