ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளரின்  பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இப்ப பேசும்போது ஒரு கருத்து வந்துச்சு…  என்னுடைய இயக்கத்தின் சகோதரர் சொன்னார்.  இப்ப வந்து சட்டமன்ற உறுப்பினர் போயிட்டு கலெக்டர் சரியா செயல்படவில்லை, ஃபண்ட் எல்லாம் எங்க கிட்ட கொடுத்துடுங்க….  நாங்க எல்லாம் பண்ணிக்கிறோம் என்று சொன்னால்,  அது நடைமுறை சாத்தியமா ?

இல்லை அல்லவா….  அப்போ நீங்க கலெக்டரிடம் உட்கார்ந்து பேசி,  எதனால நாங்க கேட்கிறோம் ? இந்த பகுதிக்கு நீங்க கொடுக்காம இருக்கீங்க….  அவங்கள கலந்து பேசி கொடுங்கன்னு சொல்லணும்… ஏன்னா இது ஒரு சிஸ்டம்.  அந்த சிஸ்டம்குள்ள தான் நீங்க பயணிக்கணும்….

நீங்க ஆளுநரை  தூக்கிட்டா வேற ஆளுநர் தான் வருவாங்க.  டெமாக்ரட்டிக்கலி அதுதான் நடக்கும்.  அந்த ஆளுநர் பிடிக்கலைன்னா….  அவரையும் மாற்ற முடியாது இல்ல. இப்போ ஒருத்தர்  சட்டமன்ற உறுப்பினர் போய் குற்றச்சாட்டு வெச்சா காலெக்டரை மாத்திட்டே இருப்பீங்களா ? இல்ல இல்ல…  முடியாது.. இட்ஸ் நாட் பாசிபிள் என தெரிவித்தார்.