பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 28-ம் தேதி மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், தற்போது இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, ஒரு கும்பல் அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாகத் தீவிர வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீஸார், ஜெகஜீத் சிங், கரண் மெஹ்ரா மற்றும் அர்ஜுன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் காவல்துறை எச்சரித்துள்ளது. ஜலந்தரில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
