கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்குனரும் கூட. இவர் இயக்கி நடித்த காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் ஒன் ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை குவித்த படமாக இது இருக்கும் நிலையில் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் என பலரது பாராட்டுகளையும் பெற்ற திரைப்படமாகும்.
இந்த நிலையில் ரிஷப்ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உண்மையாகவே அவர் கதாபாத்திரத்தில் தோன்றும் பஞ்சூருளி நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உண்மையாகவே ஒருவர் பஞ்சுருளி போன்று ஆவேசமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் காந்தாரா படத்தையே மிஞ்சும் அளவுக்கு அவரது நடனம் இருப்பதாக கூறி வருகின்றனர்.
ரிஷப் ஷெட்டி முன் நிஜத்தில் வந்திறங்கிய பஞ்சுருளி..காந்தாராவை மிஞ்சும் காட்சி#rishabshetty |#kantara | #panjurlikola | #karnataka | #ThanthiTV pic.twitter.com/OWA6F8P2vF
— Thanthi TV (@ThanthiTV) December 5, 2025
