புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியில் வினோதா என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இதே கல்லூரியில் சிலம்பரசன் என்ற மாணவனும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதில் வினோதா கர்ப்பமான நிலையில் அவருக்கு நேற்று வீட்டில் பெண் குழந்தை பிறந்துள்ளது. வினோதா அவருக்கு அவரே பிரசவம் பார்த்த நிலையில் திருமணத்திற்கு முன்னதாகவே குழந்தை பிறந்து விட்டதால் வீட்டில் உள்ளவர்கள் அதனை உயிரோடு புதைக்க முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் அருகிலிருந்த சுடுகாட்டிற்கு குழந்தையை தூக்கி சென்று உயிரோடு புதைக்க முயன்ற நிலையில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையை போலீசார் வந்ததும் அவர்களிடம் பொதுமக்கள் ஒப்படைத்த நிலையில் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

அத மருத்துவமனையில் வினோதாவுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இருவருக்கும் சிகிச்சை வழங்கப்படும் நிலையில் போலீசார் சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிலம்பரசன் சொன்னதால்தான் வினோதா குழந்தையை உயிரோடு புதைக்க முடிவு செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக வினோதா சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்கு பிறகு அவரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.