
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆஷிக்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயநாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆஷிக் தன்னுடைய காதலியை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அதன் பிறகு இந்த வீடியோவை காண்பித்து தன்னுடைய காதலியை மிரட்டியுள்ளார்.
அதாவது ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆஷிக் தலைமறை வாகிவிட்டார். இதற்கிடையில் அவர் வெளிநாடு தப்பி செல்ல முயல்வதாக ஒரு தகவல் வெளிவந்த நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. மேலும் அவர் விமான நிலையத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.