பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி, ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லாரெட்டி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்து வந்த இவர், தனது கலகலப்பான வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் குறுகிய காலத்திலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த தற்கொலைக்குக் காதல் விவகாரமே காரணம் என்று தெரியவந்துள்ளது. கோமளி கடந்த மூன்று ஆண்டுகளாக சக யூடியூபர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுமார் ஓராண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரிவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கோமளி, அதிலிருந்து மீள முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் ஒரு இளம் கலைஞரின் இந்த முடிவு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
