சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இரு திரை ஆளுமைகளும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் பிரம்மாண்டமானத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. மிகவும் ஸ்டைலான மற்றும் நகைச்சுவை கலந்த பாணியில் இந்த ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by TamilMovies 🎬 (@_tamil_movies2)

இரு நடிகர்களும் தங்களது பழைய கால ‘ரெட்ரோ’ (Retro) உடைகளில் தோன்றுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. வீடியோவின் இறுதியில் இருவரும் நெல்சனைப் பார்த்து “யார் ஹீரோ?” என்று கேட்கும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“KH × RK” (கமல் ஹாசன் × ரஜினிகாந்த்) கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் (பிப்ரவரி 21, 2026) வெளியாகி பெரும் வைரலானது. தற்போது, அந்த ப்ரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை (Making Video) தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது.