நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் குறித்தும் நடிகர்களின் அரசியல் வருகை குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். பல நடிகர்கள் கட்சி தொடங்கி வரும் நிலையில், அவரிடம் கட்சி தொடங்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, இன்னும் பத்து நாட்களில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும், இதே ஆட்சி தொடர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்துக் கேட்டபோது, திரைத்துறையில் அண்ணன் தம்பிகளாகப் பழகினாலும், அரசியலைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வரும் திமுகவிற்கே தனது ஆதரவு என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டாரின் இந்தத் திடீர் திமுக ஆதரவு நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.