திருவனந்தபுரத்தில் உள்ள பாலோட் பகுதியில் அபிஜித் தேவன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இந்துஜா என்ற பெண்ணும் காதலித்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். கடந்த 6-ஆம் தேதி இந்துஜா மதிய சாப்பாடு பரிமாறி உள்ளார். அதன் பிறகு அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அபிஜித் தேவன் அறைக்கு சென்று பார்த்தபோது தனது மனைவி ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்துஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழப்பிற்கு முன்பு இந்துஜாவை தாக்கியதற்கான காயங்கள் ஆங்காங்கே இருந்துள்ளது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அபிஜித் தேவனை காதலிப்பதற்கு முன்பு இந்துஜா அஜாஸ் என்பவரை காதலித்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இந்துஜா அஜாசை விட்டு பிரிந்து விட்டார். இதனை அடுத்து அபிஜத்தை திருமணம் செய்த பிறகு அஜாசுடன் இந்துஜா பேசியுள்ளார். தற்கொலை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு இந்துஜாவை அஜாஸ் காரில் சங்கு முகம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து மேலும் ஒருவருடன் உனக்கு தொடர்பு இருக்கிறது என கூறி அஜாஸ் இந்துஜாவை தாக்கியுள்ளார். மேலும் இந்துஜாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அபிஜித்திடம் நடந்தவற்றை தெரிவித்தார். இதனால் அபிஜித்தும் இந்துஜாவை அடித்துள்ளார். காதலனும் கணவரும் சேர்ந்து தொந்தரவு அளித்ததால் மன உளைச்சலில் இருந்துச்சா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அபிஜித் தேவன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
