ஜார்கண்ட் மாநிலத்தில் கோன் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணி குப்தா தாம் என்ற ஒரு குகை அமைந்துள்ளது. இந்த குகையில் சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பும் நிலையில் அங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் குகையில் சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுமி பாம்பு போல் உடலை வளைத்து நடித்து நாக்கை நீட்டி படுத்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்களில் சிலர் அதனை வீடியோவாக எடுத்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. இந்நிலையில் இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் கூறியதாவது, எங்கள் மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே காணாமல் போய்விட்டார். நாங்கள் அவளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது இந்த வீடியோவை பார்க்கும் போது தான் அவள் எங்கே இருக்கிறாள் என்பது தெரியவந்துள்ளது என்று கூறினர். இதைத்தொடர்ந்த அந்த சிறுமியை வணங்கி இசை வாத்தியங்கள் முழங்க அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by purvanchal (@purvanchal51)