குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் பாவ்நகர்-சோம்நாத் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை சிங்கம் ஒன்று வந்தது. அந்த சிங்கம் திடீரென எந்தவித அச்சமும் இன்றி நிதானமாகவும் தைரியமாகவும் கம்பீரமாகவும் சாலையை கடந்து சென்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு பீதியில் உறைந்து விட்டனர். ஆனால் சில வாகன ஓட்டிகள் சிங்கம் சாலையை கடக்கும் சம்பவத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் இருக்கிறது. இங்குள்ள சிங்கங்கள் அவ்வப்போது சாலையை கடப்பது மற்றும் ஊருக்குள் வருவது அந்த பகுதியில் நடக்கக்கூடிய சம்பவம். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.