வாலிபர் காட்டுக்குள் நுழைந்து யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

காட்டுக்குள் நுழைந்து ஒரு வாலிபர் யானையை தொந்தரவு செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் தொடர்ந்து வாலிபர் யானையின் வாலை பிடித்து இழுத்து தொந்தரவு செய்கிறார். ஒரு கட்டத்தில் யானை அந்த வாலிபரை துரத்துகிறது. வாலிபரும் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடி வருகிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.