உண்மையான நட்பு என்பது இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்பது என்பார்கள். அந்த வகையில், தான் செல்வந்தரான பிறகு தனது பழைய நண்பர்களை மறக்காமல், அவர்கள் ஒவ்வொருவருக்கும் விலையுயர்ந்த ‘ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்’ கைபேசியைப் பரிசளித்து அசத்தியுள்ளார் ஒரு நபர்.

மேலும் தான் ஒரு சாதாரண நிலையில் இருந்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த விலையுயர்ந்த பரிசை அவர் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அந்த நபரின் பெருந்தன்மையைப் பாராட்டி வைரலாகி வருகிறது.

“>

இந்த நெகிழ்ச்சியான வீடியோவில், தனது நண்பர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்த அந்த நபர், அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் புத்தம் புதிய ஐபோன் பெட்டிகளை வழங்குகிறார். எதிர்பாராத இந்தப் பரிசைக் கண்டு அவரது நண்பர்கள் திகைத்துப் போனதோடு, மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில் “பணம் வந்தவுடன் மனிதர்கள் மாறிவிடுவார்கள்” என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கும் வகையில், தனது வெற்றியைக் கொண்டாடும் வேளையில் நண்பர்களையும் தன்னுடன் உயர்த்திப் பிடித்த இந்த இளைஞரின் செயல் ‘நிஜமான நட்பு’ இதுதான் என நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.