இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த அலிசியா என்ற வெளிநாட்டுப் பெண், இங்குள்ள மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா செல்வதற்கு முன் அங்குக் கவனமாக இருக்கும்படி பலர் எச்சரித்ததாகவும், ஆனால் இங்கு வந்த பிறகு மக்களின் கருணையால் தான் மிகுந்த காதலில் விழுந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மும்பையிலிருந்து கோவாவிற்கு கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தபோது, ஏழ்மையான நிலையில் இருந்த ஒருவர் தனக்காகத் தண்ணீர் பாட்டில் வாங்கித் தந்த சம்பவம் தன்னை நிலைகுலையச் செய்ததாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
“உலகம் எவ்வளவு மோசமானது என்று அறிய செய்திகளைப் பாருங்கள், ஆனால் உலகம் எவ்வளவு அழகானது என்று அறியப் பயணம் செய்யுங்கள்” என அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 34 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
“உண்மையான அன்பு பணத்தைச் சார்ந்தது அல்ல, அது இதயத்திலிருந்து வருவது” எனப் பலரும் அலிசியாவின் பதிவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தான் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், இந்திய மக்களின் அன்பால் தனக்கு இன்னும் வலிமையைத் தந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
