தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அனைத்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலுக்கு திமுக எங்களுக்கு மட்டும் பணம் கொடுக்கவில்லை கூட்டணி காட்சிகள் அனைத்துக்கும் கொடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அந்த பணத்தை கையிலோ, திரை மறைவிலோ அல்லது நடு இரவில் நடைபெறும் மறைமுக பரிவர்த்தனைகளுக்கு மாறாக, திமுக தனது கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு வங்கிக் கணக்கு மூலமாகவே நிதி வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
https://twitter.com/Dhanaakutty1/status/1958128708394565675
