காங்கோ குடியரசில் கடந்த சில வருடங்களாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் M23 (மார்ச் 23) கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது சராமாறியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்புக்கு காங்கோவின் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் காங்கோ நாட்டின் கீவு மாகாணத்தில் M23 கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் 19 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.