குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள எதிர்கால கனவுகளே சிதைக்கும் அளவிற்கு பல சம்பவங்கள் நடைபெறுகிறது. 2002ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் அஜா ஷோனி என்ற பெண் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து கோமா நிலைக்குச் சென்றார்.

அவரது கணவர் தனது இரண்டு மகள்களையும் வெவ்வேறு குடும்பங்களுக்கு விற்றுவிட்டார். அனோ சர்டினியா பிலிசியிலும், அமி க்விட்டியா ஜக்தாதி நகரத்திலும் வளர்ந்தனர். ஜார்ஜியாஸ் காட் டேலண்டில் அனோ முதலில் அமியைப் பார்த்துள்ளார். அப்போது அவர்கள் இரட்டை குழந்தைகள் என்பது தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு டிக்டாக் மூலம் சந்தித்த அவர்கள் எப்படி பிரிந்தார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து வீடியோ மூலமாக இருவரும் இணைந்ததோடு தங்களுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து தெரிந்து தங்களுடைய தாயை தேடி முயற்சித்தார்கள். அதன் பிறகு அவரை சந்தித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தன் பிள்ளைகள் பிரசவத்தில் இறந்து விட்டதாக 19 வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்த இவர்களின் தாய் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இந்த சந்திப்பு பல வருடங்களுக்கு முன் நடந்தாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.