இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ‘புரோஸ்டேட்’ என்ற அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இதே மருத்துவமனையில் சார்லஸின் மருமகளும், இளவரசியுமான கேத்துக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.