பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்பி ரஞ்சித் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதோரும் அதிருப்தி எம்பிக்களும் கட்சி மாறி வருகிறார்கள். அதன்படி ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் செவல்லா தொகுதி எம்.பி ரஞ்சித் ரெட்டி, பிஆர்எஸ் எம்எல்ஏ தனம் நாகேந்தர் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.