தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில் தற்போது இல்லை என்று கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதாகவும், திமுக தலைமையிலான கூட்டணிக்குத் தங்களது கட்சி ஒரு மதச்சார்பற்ற அடையாளத்தைத் தருவதாகவும் கூறினார்.
மேலும், அதிமுகவுடன் பாஜக பின்புற வாசல் வழியாகக் கூட்டணி வைத்துள்ளதாகக் கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
