அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்னப்பட்டுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை பிடித்து விசாரித்தினர். அதில் அன்னப்பட்டுக்கும் பாலமுருகனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பாலமுருகன் அன்னபட்டுவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.