தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் விதைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றினால் முதல் முறையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது முறை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதனைத் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்ட 16 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு சட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரோ, ஒப்பந்ததாரர் அல்லது நிறுவனம் கழிவுநீரகற்றும் பணியில் தனி நபர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் அபராதத்துடன் சிறை தண்டனையும் வழங்கப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.