அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால் விமான ஊழியர்களால் கழிவறையை பயன்படுத்த அனுமதி இல்லை என தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இரண்டு மணி நேரம் அந்த பெண்ணை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காத நிலையில் தனது இருக்கையின் அருகே அவர் சிறுநீர் கழித்து விட்டார். இந்த சம்பவம் காணொளியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.