ஈரோடு கதிரம்பட்டியில் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடி இருக்கிறோம். இதனிடையே டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்பதையும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி பேசினார்.