
சென்னை கொளத்தூரில் பெரியார் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், வடசென்னை வளர்த்த சென்னையாக மாற்றுவதற்கு இந்த பெரியார் மருத்துவமனை ஒரு மைல் கல் ஆகும். இந்த மருத்துவமனைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சேகர்பாபு என்னிடம் கேட்டபோது பெரியார் நகரில் இருப்பதால் அவரின் பெயரை வைக்கலாம் என்று கூறினேன். ஏனென்றால் சமூகத்தில் உள்ள பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூகம் மருத்துவர் பெரியார் தான். அவருடைய பெயரை இந்த மருத்துவமனைக்கு சூட்டியதில் அவரின் பேரனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
திமுக அரசை பொருத்தவரை கல்வியும் மருத்துவம் தான் இரண்டு கண்கள். அதனால்தான் புதிய அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாகின்றது. அது மட்டுமல்லாமல் நாடு போற்றும் மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கொளத்தூரில் இன்று பெரியார் மருத்துவமனையை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தார்.