கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு லட்சுமண குமார் தனது நண்பரான வேலுடன் நடந்து சென்ற போது ஒரு கும்பல் வழிமறித்து லட்சுமண குமாரை பெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. வேலு பக்கம் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷ் குமார், அவரது சகோதரர் திலீப் குமார், மணிகண்டன் அவரது தந்தை திருவாழி உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தினேஷ்குமார், திலீப் குமார், திருவாழி, மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளி என தீர்மானித்தது. மேலும் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.