புனே லோஹாகாட் கோட்டை கொலை வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 20 வயதான சியா கோயல், தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து, தனக்கு நிச்சயிக்கப்பட்ட 25 வயது கேதன் அகர்வாலை கோட்டையின் உச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண விபத்து என்று கருதப்பட்ட நிலையில், காவல்துறையின் விரிவான விசாரணையில் இது சியாவால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான படுகொலை என்பது டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. சியா இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்ததே இந்தத் தீவிர முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சியாவின் தந்தை காவல்துறையிடம் அளித்துள்ள புதிய வாக்குமூலம் இந்த வழக்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 20 வயது மகள் சியா, கேதனைக் கொலை செய்ய ஒருபோதும் சதித் திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், நிச்சயதார்த்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே கேதனின் மற்றும் திக்குவாய் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் சியாவின் குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும் என்று கேதன் தந்தை முன்பு கூறியிருந்த கூற்றை, சியாவின் தந்தையின் இந்த தற்போதைய அறிக்கை நேரடியாக மறுப்பதாக அமைந்துள்ளது. இரு குடும்பத்தாருக்கும் இடையே எழுந்துள்ள இந்த முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக இந்த கொலை வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.