சிவகங்கை மாவட்டம் ஆபரணங்காடு பகுதி சேர்ந்தவர் ராமு(68). இவரது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தம்பி லட்சுமணன் என்பவருக்கு ராக்கு என்ற மனைவியும், பாண்டி என்ற மகனும் உள்ளனர். ராமு திருமணம் செய்து கொள்ளாமல் ஊரிலேயே கருவாடு தொழில் செய்து வந்தார்.

அவர் அதே பகுதியை சேர்ந்த திருநங்கைகளுடன் பழகியுள்ளார். இதனால் ஊரே அவரை தவறாக பேசியது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமு சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பேருந்து நிறுத்தம் அருகே குடிசை அமைத்து வாழ்ந்தார்.

ராமுவுக்கு சொந்தமான நிலத்தில் அவரது தம்பி மகன் பாண்டி விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் பாண்டி தனது பெரியப்பாவிடம் சென்று பணம் தேவைப்படுவதால் நிலத்தை விற்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு ராமு நீ பணத்தை கொடுத்து அந்த நிலத்தை வாங்கிக் கொள் என கூறியதால், பாண்டி “உனக்கு கல்யாணம் ஆகல. குழந்தைகள் இல்ல. என்னை மகனாய் நினைத்து நிலத்தை கொடு” என கேட்டதாக தெரிகிறது. அதனை ஏற்காமல் ராமு வேறு ஒருவருக்கு நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்து பத்திரப்பதிவுக்கு தயாரானார்.

இதனை அறிந்த பாண்டி பெரியப்பா என்று பார்க்காமல் ராமுவை வெட்டி செய்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.