உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாதத்தில் உள்ள ரத்தோடா கிராமத்தில் மனிஷா சிங் என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு குந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் மனிஷாவிடம் அவரது கணவர் மகிந்திரா தார் கார் வேணும் என கேட்டுள்ளார். அவர் வரதட்சணையாக தன் மனைவியிடம் கார் கேட்டு அவரை அடித்து துன்புறுத்திய நிலையில் மனிஷா தன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பாக மனுஷாவை அழைத்து செல்வதற்காக அவரது கணவன் அங்கு சென்ற நிலையில் அந்தப் பெண் செல்ல மறுத்ததால் விவாகரத்து குறித்து அவர் பேசியுள்ளார். ஏற்கனவே மன அழுத்ததில் இருந்த மனிஷாவுக்கு இது கூடுதல் வேதனையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அவர் தன் உடல் முழுவதும் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
