கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மார்ச் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் மார்ச் ஆறாம் தேதி முதல் இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற்று பொதுமக்கள் பார்வையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு செல்போன் எண்ணில் இருந்து அதிகபட்சமாக 5 அனுமதி சீட்டுகள் வரை பெறலாம். https://www.kalaignarulagam.org/ என்ற இணையத்தில் பதிவு செய்து பார்வையிடலாம் என அரசு அறிவித்துள்ளது.