கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த தீனாவுக்கு இன்று திருவாரூரில் திருமணம் நடக்க உள்ளது. இவர் தனது இயல்பான காமெடி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் இதன் பின் தமிழில் வெளிவந்த பா.பாண்டி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி தற்போது விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் தீனா.

டீவி ஷோக்கள் தொடங்கி, கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த தீனா, இன்னும் சில பட வாய்ப்புகளை தன்வசம் வைத்துள்ளார். சமீபத்தில் வீடுகட்டிய தீனா, வீட்டாரின் ஏற்பாட்டிற்கேற்ப கிராபிக் டிசைனரை மணக்க உள்ளார். அர்ரேஞ் மேரேஜ் என்பதால் இனிதான் காதலிக்கப்போகிறோம் என்றும் தீனா மனம் திறந்துள்ளார்.