தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் சேனாதிபதி கேரக்டருக்கு கமல் ஆறு மணி நேரம் மேக்கப் போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் கமல் தனது நடிப்பை மேலும் ஆச்சரியமூட்டும் வகையில் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அந்த சூட்டிங் நேற்று முடிவு பெற்ற நிலையில் அடுத்த மாதம் பட குழுவினர் அமெரிக்கா செல்ல உள்ளனர். அங்கு பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.